ஆளுமை:சண்முகநாதன், நாகலிங்கம்.

From நூலகம்
Name சண்முகநாதன்
Pages நாகலிங்கம்
Pages லட்சுமி ராஜாமணி
Birth 1933.06.13
Pages 1996.10.05
Place கந்தர்மடம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், நாகலிங்கம் (1933.06.13 - 1996.10.05) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் லட்சுமி ராஜாமணி. யாழ்வாணன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், யாழ்.மாநகர சபையின் நகர மண்டபக் காப்பாளராகப் பணியாற்றியவர்.

யாழ்.இலக்கிய வட்டத்தின் செயலாளராகப் பணியாற்றிய இவர், யாழ்.மாநகர சபையின் சுகாதாரப்பகுதியினர் வெளியீடு செய்த 'சுகாதார ஒலி' இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகளின் தொகுப்பாக 'அமரத்துவம்' நூலையும் 'அண்ணா கவிதாஞ்சலி' என்ற தொகுப்பையும் 'யாழ். இலக்கிய வட்டம்: இரு தசாப்தங்கள் சில நினைவுகள்' என்ற நூலினையும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 62

வெளி இணைப்புக்கள்