ஆளுமை:சசிக்குமார், வடிவேல்

From நூலகம்
Name சசிக்குமார்
Pages வடிவேல்
Pages -
Birth 1977.12.16
Place கிளிநொச்சி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சசிக்குமார், வடிவேல் (1977.12.16 -) கிளிநொச்சி, கோரக்கன் கட்டில் பிறந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை வடிவேல். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியை கிளி/ முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியிலும் கற்றார். 2003 இல் ஆசிரிய சேவையில் இணைந்து பணியாற்றினார்.

'ஏமாந்த நரியார்', 'முயலுகிறார் முயலார்' போன்ற சிறுவர் நாடக போட்டிகளில் பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் ஒரு சிறுவர் நாடக நெறியாளராகவும், நடிகராகவும் பரிணமிக்கின்றார். இவர் தற்போது கோரக்கன்கட்டு புத்தொளி கலாமன்ற பொருளாளராகவும், மன்றக்கலை, நாடக செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 47