ஆளுமை:சக்திகிரீவன், சிவப்பிரகாசம்

From நூலகம்
Name சக்திகிரீவன்
Pages சிவப்பிரகாசம்
Birth 1958.10.25
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சக்திகிரீவன், சிவப்பிரகாசம் (1958.10.25 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவப்பிரகாசம். இவர் சைவ சன்மார்க்க வித்தியாசாலையிலும் யூனியன் கல்லூரியிலும் கல்வி பயின்றார். மேலும் மு. ஞானப்பிரகாசம், க. நாகலிங்கம், தங்கம்மா அப்பாக்குட்டி, வ. நடராசா, மு. கந்தையா பஞ்சாட்சர சர்மா ஆகியோரிடம் இலக்கியம் தொடர்பான அறிவைப் பெற்று 1980 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவரால் சிவனருள் அமுதம், முருகன் புகழ், சிவசக்தி அனுபூதி ஆகிய செய்யுள்கள் வெளியீடு செய்யப்பட்டதோடு சிவனருள் அமுதம் நூலுக்கு இந்து சமய கலாச்சார அமைச்சின் கௌரவிப்பையும் ஏனைய நூல்களுக்குப் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவருக்கு 2002 ஆம் ஆண்டு இந்து சமயப் பேரவைத் தலைவர் அருட்கவி.சீ.வினாசித்தம்பி அவர்களால் சிவநெறிப்புலவர் பட்டமும் சிவநெறிச் செம்மல்' பட்டமும் சைவசமய போதனன் பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 11