ஆளுமை:கோவிந்தசாமி, இரத்தினம்

From நூலகம்
Name கோவிந்தசாமி
Pages இரத்தினம்
Pages பாக்கியம்
Birth 1927.09.18
Pages 1988
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தசாமி, இரத்தினம் (1927.09.18 - 1988) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; இவரது தாய் பாக்கியம். இவர் சிறுபராயத்தில் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி பயின்றார். பின்னர் இந்தியா சென்று தமிழ்நாடு, தருமபுரம் நாதஸ்வர வித்துவான் அபிராம சுந்தரம்பிள்ளையிடம் முறையே நாதஸ்வர இசையைப் பயின்றார்.

இவருடைய நாதஸ்வர இசையானது இராக விஸ்தாரம் நிறைந்ததாகவும் சுருதிலயம் சுத்தமானதாகவும் நிறைந்த சங்கதிகள், பிர்காக்கள் அடங்கியதாகவும் அமைந்திருக்கும். இவர் பெரும்பாலும் தோடி, கல்யாணி, சங்கராபரணம், சகானா போன்ற இராகங்களையே இராக ஆலாபனைக்கு எடுத்து நீண்ட நேரம் வாசிப்பார்.

இவருக்கு உடுவில் ஶ்ரீ சிவஞானப்பிள்ளையார் ஆதீனம் சிவஞானவாரியம், லயநாதவாரிதிப் பட்டங்களையளித்துக் கௌரவித்தது.

Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 73-76