ஆளுமை:கோபாலசிங்கம், கந்தசாமி

From நூலகம்
Name கோபாலசிங்கம்
Pages கந்தசாமி
Birth 1956.11.01
Place அராலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலசிங்கம், கந்தசாமி (1956.11.01 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. முத்துக்குமார், கணபதிப்பிள்ளை, முருகேசு மார்க்கண்டு, செல்லத்துரை, சண்முகராசா ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர், தனது 13 ஆவது வயதிலிருந்து இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது 20 ஆவது வயதில் ஒப்பந்த அடிப்படையில் இந்துக் கோயில்களின் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 64 இற்கும் மேற்பட்ட கோயில்களையும் 14 இற்கும் மேற்பட்ட ராஜகோபுரங்களையும் அமைத்துள்ளார்.

இவர் சிற்பகலா திலகம், சிற்ப கலாஜோதி, சிற்ப கலாபூஷணம், கலா லாவண்ய கர்த்தா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 261