ஆளுமை:கோடையடி தம்பாபிள்ளை

From நூலகம்
Name கோடையடி தம்பாபிள்ளை
Birth 1905
Place நாவாந்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பாபிள்ளை (1905 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவர் 1920 ஆம் ஆண்டளவில் ஆனைக்கோட்டை மயில்வாகனமிடம் ஐந்து ஆண்டுகள் வரை மிருதங்கக் கல்வியைப் பயின்றார்.

இவருடைய மிருதங்க வாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும் வேகமுடைய சொற்பிரயோகம் கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக இவருக்கு நாடக நாட்டிய வாசிப்பின் போது கோடையடி தம்பாபிள்ளை என்ற காரணப் பட்டப்பெயர் கிடைத்தது.

Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 26-27