ஆளுமை:கோகலே, ஜெயரட்ணம்

From நூலகம்
Name கோகலே
Pages ஜெயரட்ணம்
Birth 1964.09.19
Place நவாலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோகலே, ஜெயரட்ணம் (1964.09.19 - ) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர்; கவிஞர். இவரது தந்தை ஜெயரட்ணம். இவர் யாழ்ப்பாணம் சுழிபுரம் வடக்கு ஆறுமுகம் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டு தனது கலைச்சேவையை ஆரம்பித்து பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள் போன்றவற்றை நிகழ்த்தி வந்துள்ளார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பாஞ்சாலி சபதம் நாடகத்தினைத் தயாரித்து நெறிப்படுத்திய இவர், யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்கக் கல்லூரியில் கவியரங்கைத் தலைமை தாங்கியும் நடத்தியுள்ளார்.

இவர் ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதி விநாயகர் ஆலயத்தினால் முத்தமிழ் மணி பட்டத்தினையும் வண்ணார்பண்ணை கண்ணகி அம்மன் ஆலயத்தினால் சொற்கொண்டல் பட்டத்தினையும் தாவடி ஆதிகாளி அம்மன் ஆலயத்தினால் பிரசங்கவாரி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 10