ஆளுமை:கொன்ஸ்ரன்ரைன், வெளிச்சோர் யூலியஸ்

From நூலகம்
Name கொன்ஸ்ரன்ரைன்
Pages வெளிச்சோர் யூலியஸ்
Birth 1942.03.13
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கொன்ஸ்ரன்ரைன், வெளிச்சோர் யூலியஸ் (1942.03.13 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வெளிச்சோர் யூலியஸ். இவர் நாடகம், எழுத்துரு, அரங்க நிர்வாகம், நடிப்பு, ஒலி- ஒளி அமைப்பு, ஒப்பனை, தயாரிப்பு, மேடை அமைப்பு, நெறியாள்கை ஆகியவற்றில் நாட்டம் கொண்டு 1954 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் காசில்டா, கண் திறந்தது, அன்பில் மலர்ந்த அமர காவியம், அரச கட்டளை, வீரமாநகர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளதோடு சர்வாதிகாரி, தேன் விருந்து, கண்கள் எங்கே, இடிந்த கோவில் போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

இவருக்கு இவரது சேவைக்காகக் கலைஞானகேசரி பட்டமும் யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் யாழ் ரத்னா' பட்டமும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 152