ஆளுமை:கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம்

From நூலகம்
Name கைலாசபிள்ளை
Pages திருச்சிற்றம்பலம்
Pages மாணிக்கவல்லி
Birth 1857
Pages 1916
Place நல்லூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம் (1857 - 1916) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருச்சிற்றம்பலம்; தாய் மாணிக்கவல்லி. ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்ற இவர், மாட்சிமை தங்கிய தேசாதிபதியின் முதலியாராகக் கடமையாற்றினார். பணியாற்றிய காலத்தில் இராசவாசல் முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஏட்டுச்சுவடிகளைப் பதிப்பிக்கும் சி.வை. தாமோதரம்பிள்ளையின் முயற்சிக்கு உதவியாகச் செயற்பட்டார். இவர் வடதிருமுல்லை வாயில், மும்மணிக் கோவை ஆகிய பிரபந்தங்களின் அகவற் பாடல்களைப் பாடியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 127-136
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 04
  • நூலக எண்: 963 பக்கங்கள் 93
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 68-79