ஆளுமை:கைலாசபிள்ளை, தம்பு

From நூலகம்
Name கைலாசபிள்ளை
Pages தம்பு
Birth
Place நல்லூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபிள்ளை, தம்பு யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பு. ஆறுமுக நாவலரால் வண்ணார்பண்ணையில் தாபிக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் இளமைக் கல்வியை பயின்றார். இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைபெற்றிருந்தார்.

சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகப் பணியாற்றிய இவர், அப்பாடசாலையை நிலைக்களமாகக் கொண்டு சுன்னாகம் குமாரசாமிப்புலவர், மாதகல் ஏரம்புப்புலவர், மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை, மாதகல் அருணாசலஐயர், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர், ஊரெழு சரவணமுத்துப்புலவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்ச்சங்கம் ஒன்றை அமைத்துத் திறப்பட நடாத்தினார். இச்சங்கம் மதுரைத் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.

'இந்துசாதனம்' பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிவஞானசித்தியார் - சுபக்கம் - இவரால் ஆராயப்பட்டுத் திருத்தமான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாவலரின் வாழ்க்கை வரலாற்றினை விரிவாக எழுதி ஆறுமுகநாவலர் சரித்திரம் என வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 200-203
  • நூலக எண்: 963 பக்கங்கள் 96-98