ஆளுமை:கைலாசநாதன், அ. (அங்கையன்)

From நூலகம்
Name கைலாசநாதன்
Birth 1942.08.14
Pages 1976.04.05
Place மண்டைதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசநாதன், அ. (1942.08.14 - 1976.04.05) யாழ்ப்பாணம், மண்டைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி ஆகியோரின் வழிகாட்டலில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார்.

அங்கையன் என்னும் புனைபெயரில் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எனப் பலவற்றை எழுதியுள்ள இவர், கடற்காற்று, செந்தணல், வானம்பாடியும் சிட்டுக்குருவியும் ஆகிய நாவல்களையும் வைகறை நிலவு கவிதைத் தொகுப்பையும் 2000 ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 175
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 241-246