ஆளுமை:கெங்காதரன், மயில்வாகனம்

From நூலகம்
Name கெங்காதரன்
Pages மயில்வாகனம்
Birth 1910.02.01
Pages 1994
Place நல்லூர்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கெங்காதரன், மயில்வாகனம் (1910.02.01 - 1994) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி இயங்கிய காலத்தில் ஆசிரியராக இருந்த எஸ். ஆர். கனசபையிடம் ஓவிய நுணுக்கங்களைப் பயின்ற இவர், கண்ணாடி ஓவியம், கோவில் திரைச் சீலைகள், சுவர் சித்திரங்கள் வரைவதில் திறமை மிக்கவராக விளங்கினார். கொழும்புத் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்றுத் திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் சிலகாலம் போதனாசிரியராகப் பணியாற்றிப் பின் அப்பதவியைத் துறந்து சுயமாகத் தன் ஜீவனோபாயத் தொழிலாக இக்கலையை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் கோபுர வாயில், நீர்வேலிக் கந்தசாமி கோயில் தேர்முட்டி, கோப்பாய் கந்தசுவாமி கோவில் சுவரோவியங்கள் ஆகியன இவரின் கலை வெளிப்பாடுகளாகும்.

முன்னாள் பிரதமர் கௌரவ பண்டாரநாயகாவினால் 1956 ஆம் ஆண்டு இவர் வெள்ளிப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா எழுதிய தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் நூலில் இவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 183