ஆளுமை:குமாரசாமிப் புலவர், தம்பிப்பிள்ளை

From நூலகம்
Name குமாரசாமிப் புலவர்
Pages தம்பிப்பிள்ளை
Pages சிவபாக்கியம்
Birth 1895.08.17
Pages 1982.02.15
Place கொக்குவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமிப் புலவர், தம்பிப்பிள்ளை (1895.08.17 - 1982.02.15) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; தாய் சிவபாக்கியம். 1910 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்ற இவர், திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆச்சாபுரம் தேவாரப் பாடசாலையில் முறைப்படி ஐந்து ஆண்டுகள் தேவார இசையைப் பயின்றதோடு 1917 வரை தருமபுர ஆதீனத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்றார். இவர் 1929 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தேவார இசை ஆசிரியராக நியமனம் பெற்றார்.

இவர் தனது பண்ணிசைக் கச்சேரிகளை ஈழத்தின் பல பகுதிகளிலும் இந்தியாவிலுமம் மலேசியாவிலும் நிகழ்த்தியுள்ளார். 1922 ஆம் ஆண்டில் கொக்குவில் சி ஞானபண்டித வித்தியாசாலையை நிறுவி, வித்தியாலயத்தின் முன்னேற்றத்திற்கு தனது பண்ணிசை அரங்குகளினூடாக வரும் பணத்தினைச் செலவிட்டார்.


Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 113-115