ஆளுமை:குமாரசாமி, செல்லத்துரை

From நூலகம்
Name குமாரசாமி
Pages செல்லத்துரை
Birth 1951.01.10
Place உடுப்பிட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி, செல்லத்துரை (1951.01.10 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர், ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. ஈழத்துச் சீர்காழி என அழைக்கப்படும் இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திருப்பாழயம் ரி. என். சிவசுப்பிரமணியம்பிள்ளை, சிதம்பரம் எஸ். வேணுகோபாலய்யர், மைலம் எம். பி. வச்சிரவேலு முதலியார் கலாபூஷணம் திரு. ஜே. இராசலிங்கம் ஆகியோரிடம் தனது இசைக் கலையைப் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். எஸ். எல். ஈ. ஏ. எஸ் சித்தியடைந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இசைத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

இசைத்துறையில் இவரது ஆளுமையைக் கெளரவித்து ஞானபண்டித இசையரசு, இசை மாமணி, கீதாசாகரம், இசை நாவலன், சங்கீத பூஷணம் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 57
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 277