ஆளுமை:குணரத்தினம், வாசுகி

From நூலகம்
Name வாசுகி
Pages குணரத்தினம்
Birth
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரத்தினம், வாசுகி மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை பிரபல கவிஞர் செ குணரத்தினம்; ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையிலும் கற்றார். இவர் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். கவிதை, கட்டுரை, சிறுகதை என பல துறைகளில் தனது ஆக்கங்களை எழுதி வருகிறார். 12 வயதில் எழுத்துத் துறைக்கு பிரவேசித்துள்ளார். முதலாவது ஆக்கம் கவிதையாகும். இக் கவிதை இலங்கை வானொலியின் சிறுவர் மலரில் ஒலிபரப்பானது. தொடர்ந்து வீரகேசரி, தினக்கதிர் ஆகிய நாளிதழ்களிலும், பெண், உதயம் போன்ற சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் பாராட்டும் பெற்றுள்ளார் எழுத்தாளர் வாசுகி குணரத்தினம்.


Resources

  • நூலக எண்: 615 பக்கங்கள் 22
  • நூலக எண்: 3191 பக்கங்கள் 22