ஆளுமை:கிருஷ்ணமூர்த்தி, ஐயாத்துரை

From நூலகம்
Name கிருஷ்ணமூர்த்தி
Pages ஐயாத்துரை
Birth 1950.02.01
Place ஊர்காவற்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணமூர்த்தி, ஐயாத்துரை (1950.02.01 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் 20 வருடங்களுக்கு மேலாக நாட்டுக் கூத்துத் துறையிலும் மிருதங்கம் வாசிப்பதிலும் தனது கலைப்பணியை ஆற்றி வந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை போன்ற இடங்களில் அதியரசன், ஞானசவுந்தரி, பண்டாரவன்னியன், அரிச்சந்திர மயான காண்டம் ஆகிய நாட்டுக்கூத்துகளை இவர் நடித்ததோடு, காந்திஜி நாடக மன்றத்தின் செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கூத்து கலையரசு என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 148