ஆளுமை:கிருஷ்ணதுரை, இரத்தினசிங்கம்
Name | கிருஷ்ணதுரை |
Pages | இரத்தினசிங்கம் |
Pages | சிவபாக்கியம் |
Birth | 1944.09.22 |
Pages | 2015.04.08 |
Place | நாரந்தனை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணதுரை, இரத்தினசிங்கம் (1944.09.22 - 2015.04.28) யாழ்ப்பாணம், நாரந்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இரத்தினசிங்கம்; தாய் சிவபாக்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை அரசினர் விக்டோரியாக் கல்லூரியிலும் கற்றார்.
சிறு வயதில் நாடகத்துறையில் தடம் பதித்த இவர், வள்ளியாக நடிக்கத் தொடங்கிப் பின்னர் பவளக்கொடி, கோவலன், ஶ்ரீவள்ளி, அரிச்சந்திர மயான காண்டம், நந்தனார் உட்பட 46 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். சிறந்த நாடக எழுத்தாளராகவும் இயக்குனராகவும் பாடல்கள் பாடுவதிலும் விளையாட்டுத்துறையிலும் வல்லவராகவும் விளங்கும் இவர், தவச பத்திரிகைக் குழுவில் தினபதி, சிந்தாமணி, ராதா, தந்தி பத்திரிகைகளில் ஒப்பு நோக்காளராகவும் சிறுகதைகள் எழுதுபவராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது சேவைக்காக நவரச நடிகன், நடிக தளபதி, கலைவாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 147