ஆளுமை:கார்த்திகேசு, வேலுப்பிள்ளை

From நூலகம்
Name கார்த்திகேசு
Pages வேலுப்பிள்ளை
Birth 1952.11.14
Place மாதனை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, வேலுப்பிள்ளை (1952.11.14 - ) யாழ்ப்பாணம், மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் கந்தசாமி, பொ. சிவப்பிரகாசம், மோகனதாஸ், து. மகாலிங்கம், ந. சிவசுப்பிரமணியம் ஆகியோரிடம் கலைத்துறை அறிவைப் பெற்று 1968 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர், யாழ்ப்பாண கன்னாதிட்டி சிவன்கோவில் தேர், அச்சுவேலி வைரவர் கோவிலில் எலி வாகனம், புத்தூர் சிவன் கோவிலில் ஆட்டுகடா, வரணி பிள்ளையார் கோவிலில் பல்லக்கு, வல்லிபுர ஆழ்வார் ஐந்து தலை நாகம், மாவைக் கந்தனின் மஞ்சம் போன்ற மரத்தினாலான சிற்பங்கள் பல செய்துள்ளார்.

இவரது திறமைக்காக 2008 ஆம் ஆண்டில் கலாச்சாரப் பேரவையால் கலைப்பருதிப் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 146