ஆளுமை:கார்த்திகேசு, ஐயம்பிள்ளை

From நூலகம்
Name கார்த்திகேசு
Pages ஐயம்பிள்ளை
Pages வள்ளியம்மை
Birth 1907
Pages 1987.08.11
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, ஐயம்பிள்ளை (1907 - 1987.08.11) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் கஷ்ரப்பிரதேசங்களில் வைத்தியப்பணியையும் ஆற்றியுள்ளார்.

இவர் வேலணையில் கல்வி கற்பதற்காகச் சிறார்கள் படும் துன்பத்தைக் கண்டு, துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்துப் பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 298-300