ஆளுமை:கார்த்திகேசன், முருகுப்பிள்ளை

From நூலகம்
Name கார்த்திகேசன்
Pages முருகுப்பிள்ளை
Birth 1919
Pages 1977
Place யாழ்ப்பாணம்
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசன், முருகுப்பிள்ளை (1919 - 1977) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், செயற்பாட்டாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்து தாயகம் திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரிப் பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும் மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டுத் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகன இவர், கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் போட்டியிட்டுச் சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மை இனத்துக்குள் சிறுபான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக சுல்தான் அவர்களை யாழ்ப்பாண நகரசபை முதல்வராக்கியமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 41-43

வெளி இணைப்பு