ஆளுமை:காசிநாதர், வீரகத்தியார்
From நூலகம்
Name | காசிநாதர் |
Pages | வீரகத்தியார் |
Birth | 1949.09.04 |
Place | வரணி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காசிநாதர், வீரகத்தியார் (1949.09.04 - ) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தியார். இவர் வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவர் வரணி, குடத்தனை, பருத்தித்துறை, வேலணை, திருகோணமலை, சாவகச்சேரி, வவுனியா, கொடிகாமம் போன்ற இடங்களில் சம்பூர்ண அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், கோவலன் கண்ணகி, பட்டினத்தார், காத்தவராயன், பவளக்கொடி, சத்தியபாமா போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது கலைப்பணிக்காக வரணி கலாமன்றத்தினால் இசைத் தென்றல், கலைச்செல்வன் பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 145