ஆளுமை:கலீல், பக்கீர் தம்பி

From நூலகம்
Name முஹம்மது மக்பூர் கலீல்
Pages பக்கீர் தம்பி
Pages சுலைஹா
Birth
Place கல்முனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது மக்பூர் கலீல், பக்கீர் தம்பி. திகாமடுல்ல, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பக்கீர் தம்பி; தாய் சுலைஹா. இவர் கல்முனை அஸ்ஹர் வித்தியாலயத்திலும் கல்முனை ஸாஸிராக் கல்லூரியில் கற்றுப் பின்பு குருநாகல் பாணகமுக அரபுக் கல்லூரியிலும் மாவத்தகம பறஹதெனிய அரபுக் கல்லூரியிலும் கற்று அரபுத் துறையில் தேர்ச்சி பெற்றார். இவர் தென்னிந்திய அரபுப் பாடசாலைகளில் கற்று 1984 இல்'நூரி' பட்டம் பெற்றார்.

1970 இலிருந்து கல்முனைக் கலீல், எம். எம். கலீல், கலீலா, மலர்நேசன், கல்முனை நிஷா, சுபையிதா, சுலைஹா மைந்தன் ஆகிய புனைபெயர்களில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதிவரும் இவர், கல்முனைக் ஸாஸிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் கல்லூரியின் 'அம்பு இலக்கியச் சஞ்சிகையில் தனது கன்னிக் கவிதையை எழுதினார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, மித்திரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன. 1983 இல் குமுதம் 'சஞ்சிகையில் கவிஞர் கண்ணதாசனின் வாரிசு யாரோ' என்றகவிதைப் போட்டியில் இவரது 'ஒரு கிராமத்தின் விடியற்காலை' என்ற கவிதை இரண்டாம் பரிசு பெற்றது.

இவர் கல்முனை புதுமை இலக்கிய வட்டத்தின் உப தலைவராகவும் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் முன்னணியின் உப செயலாளராகவும் பொதுக்குடி கரீமிய்யா சொற் பயிற்சி மன்றத்தின் தலைவராகவும் இன்னும் பல அமைப்புக்களிலும் பணியாற்றினார்.

Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 106-108