ஆளுமை:கருணைரெத்தினம், சுஜீவா

From நூலகம்
Name சுஜீவா
Pages கருணைரெத்தினம்
Pages ஏஞ்சல்
Birth
Place மட்டக்களப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணைரெத்தினம், சுஜீவா மட்டக்களப்பு பாலமீன்மடுவில் பிறந்த கலைஞர். இவரது தந்தை கருணைரெத்தினம்; தாய் ஏஞ்சல். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலையில் தமிழில் கல்வி பயின்று பின் கண்டியிலும் கொழும்பிலும் கல்வியைத் தொடர்ந்ததினால் சிங்கள மொழியிலே மிகவும் தேர்ச்சி பெற்றவராகக் காணப்படுகிறார். சுஜீவா கர்நாடக இசையை முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர். இவரின் கணவர் சுனேத்கலும் இசைத்துறையில் புகழ்பெற்ற கலைஞரும் சவுண்டு எஞ்சினியருமான சிங்கள இனத்தைச் சேர்ந்தவராவார். இவரது இசை வாழ்வுக்கு இவரின் பெற்றோர்களும் சகோதரனும், சகோதரியும் தான் காரமென தெரிவிக்கிறார் சுஜீவா. புகழ் பெற்ற பாடகி நிலாமதி, புகழ்பெற்ற பாடகர் மகிந்தக்குமார் இவரின் உடன் பிறப்புக்கள். தமிழ்ப் பெண்ணாக இருந்து சிங்கள மக்களிடையே பெரும் புகழுடன் சிங்கள மொழியில் பாடிப் பெரும் புகழின் உச்சியில் இருக்கும் பாடகி சுஜீவா. தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கின்றார் அத்துடன் சில தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். சுஜீவா ஏற்கனவே கர்நாடக இசையையும் பரதநாட்டியத்தையும் முறையாகப் பயின்று அரகேற்றியுள்ளார்.