ஆளுமை:கருணாகரன், சிவராசா

From நூலகம்
Name கருணாகரன்
Pages சிவராசா
Pages சிவபாக்கியம்
Birth 1963.09.05
Place இயக்கச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், சிவராசா (1963.09.05 - ) கிளிநொச்சி, இயக்கச்சியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவராசா; தாய் சிவபாக்கியம். இவர் இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, பளை மகா வித்தியாலயம் (பளை மத்தியகல்லூரி) ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஈரோஸ் அமைப்பின் பொதுமைப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் விடுதலைப்புலிகள் கலை-பண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் 1980களின் முற்பகுதியிலிருந்து கவிதை, சிறுகதை, இலக்கியம், அரசியல், சமூகவியல், விமர்சனம் போன்ற துறைகளில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.

இவர் ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள், நெருப்பின் உதிரம், இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் கவிதை நூல்களையும் வேட்டைத்தோப்பு சிறுகதையும் இப்படி ஒரு காலம் என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 361