ஆளுமை:கமர்ஜான் பீபி, எஸ்.யூ

From நூலகம்
Name கமர்ஜான் பீபி, எஸ்.யூ
Pages எஸ்.செய்யத் உமைதுல்லாஹ்
Pages ஒமர்தீன் ஹசீனா உம்மா
Birth
Place ஹுணுப்பிட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமர்ஜான் பீபி, எஸ்.யூ வத்தளை ஹுணுப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை எஸ்.செய்யத் உமைதுல்லாஹ்; தாய் ஒமர்தீன் ஹசீனா உம்மா. ஹுணுப்பிட்டி செல்வி எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். இவரது கணவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான எம்.எம்.எம்.நூருல் ஹக் ஆவார். ஆரம்பக் கல்வியை சாஹிரா மகாவித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை அல் ஹிலால் மத்திய கல்லூரியிலும் கற்றார். உளவளத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியருமாவார். சிறிது காலம் அதிபராகவும் கடமையாற்றி தற்பொழுது உளவளத்துணையாளராகவுள்ளார். படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல், சித்திரம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். 1980ஆம் ஆண்டு அல்ஹிலால் மகாவித்தியாலயத்தில் வெளிவந்த றோனியோ இதிழில் இவரது மறையின் மகிமை என்ற முதலாவது கவிதை வெளிவந்தது. இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி ஆகிய நாளிதழ்களிலும் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான மாதர் மஜ்லிஸ், இளைஞர் இதயம், கவிதைக்களம், கருத்துக்கள் எழுதுதல், பிஞ்சு மனம், தமிழ் சேவையில் ஒலிபரப்பான இன்றைய நேயர், பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, அனுபவம் புதுமை, கடிதமும் பதிலும், புதுமைப் பெண் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்தோடு சப்தம், மருதம் ஆகிய இலக்கிய சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியராகவும் இவர் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு நான் மூச்சயர்ந்த போது என்ற கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்