ஆளுமை:கனகராசா, சின்னத்தம்பி

From நூலகம்
Name கனகராசா
Pages சின்னத்தம்பி
Pages -
Birth 1955.06.15
Place கிளிநொச்சி
Category இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகராசா, சின்னத்தம்பி (1955.06.15 -) யாழ்ப்பாணம், வரணி கிராமத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, கண்டாவளையைப் வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் ஆரம்பக்கல்வியை யா/வரணி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார். ஆர்மோனியம், ஓர்கன், மெலோடிக்கா, எக்கோடியன் என சகல கட்டை வாத்தியங்களையும் கற்றுத்தேறியவர்.

சத்தியவான் சாவித்திரி, அல்லி அர்ச்சுனா, பவளக்கொடி, காத்தவராஜன் போன்ற பல்வேறு நாடகங்களில் ஆர்மோனிய இசை மீட்டும் கலைஞனாகவும், சிறந்த குரல் நயம் மிக்க பக்கப்பாட்டுக்காரராகவும் செயற்பட்டு வருகிறார். இவர் கண்டாவளை முத்தமிழ் கலாமன்ற மூத்த உறுப்பினராகவும், கண்டாவளை பிரதேச கலாசார பேரவை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.

2011இல் 'கலை ஒளி' விருதினையும், 'கலைக்கிளி' விருதினையும் பெற்றார். 2014 இல் தேசிய மட்ட உயர் மட்ட விருதான 'கலாபூசண' விருதினையும் பெற்றார்.

Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 18-19