ஆளுமை:கனகரத்தினம், இரா.வை

From நூலகம்
Name கனகரத்தினம்
Pages வைத்திலிங்கம்
Pages சிகாமிப்பிள்ளை
Birth 1946.08.23
Pages 2016.05.24
Place நெடுந்தீவு
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேராசிரியர் கனகரத்தினம், இரா.வை (1946.08.23) நெடுந்தீவில் பிறந்த ஆளுமை. இவரது தந்தை வைத்திலிங்கம்; தாய் சிவகாமிப்பிள்ளை ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு கோட்டைக்காடு மகேஸ்வரி வித்தியாசாலை, நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் முத்துத்தம்பி வித்தியாசாலை யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியி ஆகியவற்றில் கற்றார். 1964ஆம் ஆண்டு தொடக்கம் 1968ஆம் ஆண்டு வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி மற்றும் முதுக்கலைமாணி பட்டப்படிப்பினைக் பெற்றார்.

ஆறுமுகநாவலர் சைவத்திற்கு ஆற்றிய பணி எனும் தலைப்பிலே ஆய்வு செய்து முதுகலைமாணிப்பட்டத்தை பெற்றார். பேராசிரியர் கனகரத்தினம் களனி, பேராதனை ஆகிய பல்கலைக்ழகங்களில் உதவி விரிவுரையாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துணைப் பேராசிரியர் பதவிகளை வகித்தார். தரம் ஆறு தொடக்கம் க.பொ.த.சா.த வரையிலான சைவ நெறிப் பாடத்திட்டம், ஆசிரியர் கைந்நூல், பாட நூல்கள் என்பனவற்றிற்கு 1997ஆம் ஆண்டு தொடக்கம் ஆலோசனை வழி காட்டல்களை வழங்கியுள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். பல நூல்களின் ஆசிரியர், பதிப்பாசிரியர், மலராசிரியர், சஞ்சிகை ஆசிரியர், கட்டுரை ஆசிரியர். ஈழத்திற் புராணபடனச் செல்வாக்கு ஓர் ஆய்வு (985), ஏழாலை அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு – ஒரு நோக்கு (1986), நாவலர் உரைத்திறன் (1997), நாவலர் மரவு (1999), ஆறுமுகநாவலர் வரலாறு ஒரு புதிய பார்வையும் பதிவும் (2001), பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் புலமையியல் ஓர் ஆய்வு (2004), இலங்கைத் தமிழறிஞர் நூல்வரிசை ஆறுமுக நாவலர் (2007) ஆகிய நூல்களின் ஆசிரியருமாவார். பேராசிரியரின் ஆய்வு முயற்சிகளில் இவரின் மனைவி ஆசிரியை மீனலோஜினி மிகவும் உதவியாக இருந்துள்ளார்.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 1898 பக்கங்கள் 52-53

வெளி இணைப்புக்கள்