ஆளுமை:கந்தையா, வினாசித்தம்பி

From நூலகம்
Name கந்தையா
Pages வினாசித்தம்பி
Pages சின்னாத்தை அம்மை
Birth 1920.07.29
Place மண்டூர்
Category பண்டிதர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, வினாசித்தம்பி (1920.07.29-) கிழக்கு மாகாணத்தின் மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர் . இவரது தந்தை வினாசித்தம்பி; இவரது தாய் சின்னாத்தை அம்மை.

இவர் தன் இளமைக்காலத்தில் வ. பத்தக்குட்டி உபாத்தியாயரிடமும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையிடமும் விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயரிடமும் கல்வி பயின்றார்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்து ஆரிய பாசா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும் (1943) மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டமும் (1944) இலங்கைப் பல்கலைக்கழகத்தி்ன் தமிழ் வித்துவான் பட்டமும் (1952) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L) பட்டமும் (1954) பெற்றார். இவர் பண்டிதர் என்றும், புலவர் என்றும் பலராலும் அறியப்பட்டவர்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 90



வெளி இணைப்பு