ஆளுமை:கந்தையா, மருதன்

From நூலகம்
Name கந்தையா
Pages மருதன்
Birth 1946.10.01
Place சரவணை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, மருதன் (1946.10.01 - ) யாழ்ப்பாணம், சரவணையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மருதன்.

இவர் நந்தனார், அரிச்சந்திர மயான காண்டம், சாம்ராட் அசோகன் ஆகிய நாடகங்களை இயக்கியும் நடித்துமுள்ளதோடு சிந்திய ரத்தங்கள் சீரழிந்ததில்லை, இதயக் குழுறல் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் திருவள்ளுவர் நாடக மன்றத்தினை நிறுவி, 2002 ஆம் ஆண்டில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தினை வவுனியா, மாத்தறை போன்ற இடங்களிற்குக் கொண்டு சென்று மேடையேற்றியதோடு தனது மன்றத்தில் கும்மி, கோலாட்டம், காவடி, கிராமிய நடனம் முதலானவற்றைப் பயிற்றுவித்துமுள்ளார்.

இவருக்கு 2004 இல் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய இசை நாடகப் போட்டியில் சிறந்த நடிகருக்கான மரபுக் கலைச்சுடர் பட்டமும் கலைவாருதி என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவித்தது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 142