ஆளுமை:கந்தசாமி, கனகசபை

From நூலகம்
Name கந்தசாமி
Pages கனகசபை
Pages சோதிப்பிள்ளை
Birth 1957.10.02
Place யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, கனகசபை (1957.10.02) யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கனகசபை; தாய் சோதிப்பிள்ளை. ஆரம்பக் கல்வியை நீர்வேலி றோ.க.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஆவரங்காலிலும் பயின்றார். 1986ஆம் ஆண்டு அச்சுவேலி சின்னத்துரை அவர்களின் நெறிப்படுத்தலில் காத்தவராயன் நாடகத்தைப் பயின்று பல மேடைகளேற்றி முன் முத்துமாரி, ஆதிசிவன், தொட்டியச் சின்னான், நல்லி, காத்தவராயன் போன்ற பல பாத்திரங்களில் நடித்தார். 1990ஆம் ஆண்டிலிருந்து அண்ணாவியராக காத்தவராயன் கூத்தினை நெறிப்படுத்தி பல நாடக மன்றங்களை உருவாக்கி மேடையேற்றியுள்ளார்.

அழியாத கோலங்கள், பெண்புத்தி பின்புத்தி, விதியின் விளையாட்டு, எதையும் தாங்கும் இதயம் மற்றும் சகோதர பாசம் போன்ற பல சமூக சீர்திருத்த நாடகங்களையும் நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். மேலும் சரித்திர நாடங்களையும் அரங்கேற்றினார்.2013ஆம் ஆண்டு சிறுப்பிட்டி கிழக்கு சனசமூக நிலைய ஆண்டு விழாவில் ஏழையின் கண்ணீர் என்ற சமூக நாடகத்தை மேடையேற்றி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். கோயில் பஜனை பாடுவது, பக்திப் பாடல்கள், தாலாட்டு பாட்கள் பாடுவதிலும் உடுக்கு இசைப்பதிலும் திறமையானவர்.

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 25-26