ஆளுமை:கணேசையர், சின்னையர்

From நூலகம்
Name கணேசையர்
Pages சின்னையர்
Pages சின்னம்மாள்
Birth 1878.03.15
Pages 1958.11.08
Place புன்னாலைக்கட்டுவன்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசையர், சின்னையர் (1878.03.15 - 1958.11.08) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னையர்; தாய் சின்னம்மா. இவர் புன்னாலைக்கட்டுவன் சைவ வித்தியாசாலையில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். இவரது பெரியதந்தை கதிர்காம ஐயரிடமும், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, குமாரசாமிப்புலவர் ம.க.வேற்பிள்ளை ஆகியோரிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் நயினாதீவு சைவ வித்தியாசாலையிலும் பின்னர் மல்லாகம் சைவத் தமிழ் வித்தியாசாலையிலும் தலைமையாசிரியராக ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றினார். பின்னர் சதாசிவ ஐயரின் பிராசீன பாடசாலையில் 1921 தொடக்கம் 1938 வரை தமிழ்ப் பகுதித் தலைவராகப் பணியாற்றினார்.

பிராசீன பாடசாலையிலிருந்து ஓய்வுபெற்ற பின் சில மாணவர்களுக்குத் தனிப்பட கற்பித்தும் நூல்களை எழுதியும் வந்தார். மதுரைத் தமிழ்ச் சங்க 'செந்தமிழ்' வெளியீட்டுக்கு நீண்டகாலமாக ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதிவந்தார். இவரது மொழி அறிவையும் ஆராய்ச்சித்திறனையும் பாராட்டி யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் 'வித்துவசிரோமணி' என்ற பட்டத்தை 1952 ஆம் ஆண்டு வழங்கிக் கெளரவித்தது.

ஆராய்ச்சிகள், கண்டனங்கள், கட்டுரைகள், இலக்கியங்களுக்கு உரை என பலவற்றை எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய உரை ஈழகேசரி பொன்னையாவால் வெளியிடப்பட்டது. இவற்றுடன் குமாரசுவாமிப் புலவர் சரித்திரம், குசேலர் சரித்திரம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், இரகுவம்ச உரை, அகநானூறு உரை, வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் இருபாவிருபஃது, மேக தூதக் காரிகை உரை ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 186 பக்கங்கள் 03-14
  • நூலக எண்: 4777 பக்கங்கள் 01-112
  • நூலக எண்: 963 பக்கங்கள் 58-60
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 199-210
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 26
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 97-104