ஆளுமை:கணேசன், பஞ்சாட்சரம்

From நூலகம்
Name கணேசன்
Pages பஞ்சாட்சரம்
Birth 1967.09.21
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசன், பஞ்சாட்சரம் (1967.09.21) யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கை சேர்ந்த கலைஞர். இவரது தந்தை பஞ்சாட்சரம்; நாடகக் கலைஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமாவார். 1990ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழகத்தில் இணைந்து கலைக்கு சேவையாற்றி வருகிறார்.

காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். சகுந்தலை, பூதத்தம்பி போன்ற இசை நாடகங்களிலும் தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதிபராக கடமை புரியும் இவர் காத்தவராயன் சிந்து நடைக் கூத்தினை மாணவர்களுக்கு பயிற்றுவித்து இறுவட்டு வடிவில் மழலைகள் அமுதம் எனும் பெயரில் வெளியிட்டுள்ளார். அகில இலங்கை அமுத சுரபி கலாமன்றத்தில் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 22