ஆளுமை:கணேசன், செல்லையா

From நூலகம்
Name கணேசன்
Pages செல்லையா
Pages வள்ளிப்பிள்ளை
Birth 1970.04.05
Pages -
Place குஞ்சன்குளம், மாங்கேணி,மட்டக்களப்பு
Category வேட மதகுரு (கப்புறாளை)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



செல்லையா கணேசன் (1970.04.05) கிழக்கு மாகாண கரையோர வேடர் சமூகத்தின் (கப்புறாளை) மதகுருவாகக் காணப்படுகிறார். இவரது பிறந்த இடம் மாங்கேணி எனும் கிராமம் ஆகும். தற்போது வசிக்கும் இடம் குஞ்சன்குளம் எனும் கிராமம் ஆகும். தந்தை செல்லையா;தாய் வள்ளிப்பிள்ளை. இவரது மனைவி குணவதி. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது ஆரம்பக்கல்வியினை மதுரங்குளம் வித்தியாலயத்தில் தரம் ஆறு வரை கல்வி கற்றுள்ளார். இவரது மூதாதையர்கள் கிழக்கில் வேடர் தொல்கிராமமான களுவன்கேணியில் இருந்து மாங்கேணிக்கு இடம் பெயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தற்காலச் சூழலில் அவரது கிராமத்தில் வேடமொழியினைப் பேசக்கூடிய வாழும் தலைமுறையாகக் காணப்படுகிறார். தனது கிராமத்தினைச் சார்ந்த அயல் கிராமமெங்கும் காணப்படும் அனைத்து சடங்கு மையங்களிலும் சடங்கை நடாத்தும் பிரதான கப்புறாளையாகவும் இவர் காணப்படுகிறார். இவரது பிரதான தொழில்களாக தேன் எடுத்தல், வேட்டைக்குச் செல்லல் மற்றும் மீன் பிடித்தல் என்பன காணப்படுகின்றன. அத்துடன் இவர் தனது கிராமத்தின் அபிவிருத்திச்சங்கம், பழங்குடிகள் அமைப்பு முதலானவற்றிலும் அங்கத்துவம் வகிப்பவராகவும் காணப்படுகின்றார்.