ஆளுமை:கணேசன், கந்தசாமிப்பிள்ளை

From நூலகம்
Name கணேசன்
Pages கந்தசாமிப்பிள்ளை
Pages தங்கமுத்து
Birth 1933.05.08
Pages 2002.08.09
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசன், கந்தசாமிப்பிள்ளை (1933. 05. 08 - 2002. 08. 09) இணுவிலைச் சேர்ந்த தவில் கலைஞர். இவரது தந்தை கந்தசாமிப்பிள்ளை; தாய் தங்கமுத்து.

பிரபல தவில் வித்துவான்களான இணுவில் இரத்தினம்பிள்ளையிடமும், திரு.சின்னத்தம்பி அவர்களிடமும் தவில் பயிற்சியைக் கற்று பின்னர், தனது சொந்த முயற்சியால் தவில் வாசிப்பதில் பிரபலமடைந்த இவர், தமிழ்நாடு திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திற்கும் மற்றும் பிரபலமான பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இந்திய அரசின் 'கலைமாமணி' பட்டத்தைப் பெற்றதுடன் தென்னிந்தியாவில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் நாதஸ்வரம் வாசித்துக் கலைஞர்களின் மதிப்பைப் பெற்றவர். தவில் வாத்தியத்தை விட கஞ்சிரா வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவராவார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 570-571


வெளி இணைப்புக்கள்