ஆளுமை:கணபதிப்பிள்ளை, முருகேசு

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages முருகேசு
Pages சின்னத்தங்கம்
Birth 1923
Pages 1974
Place வேலணை
Category தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, முருகேசு (1923 - 1974) வேலணை, மண்கும்பானைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மண்கும்பான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்றார். குடும்ப பொருளாதார நிலமையினால் சிறுவயதில் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்.

1943 இல் கொழும்பு சென்று கடை ஒன்றில் சிற்றூழியராகத் தொழில் புரிந்தார். 1950 ஆம் ஆண்டு கொழும்பில் ஸ்ரீ கதிரேசன் வீதியில் கடை ஒன்றை நிறுவி யாழ்ப்பாணம், கொக்குவிலிலிருந்து பெருந்தொகையான சுருட்டுக்களை இங்கு கொண்டு வந்து, கொழும்பிலுள்ள சுருட்டு விற்பனைக் கடைகள் அனைத்திற்கும் விநியோகித்து வந்தார். ஊழியர்கள் எவருமின்றித் தானே தனித்து இத்தொழிலைத் திறம்பட நடாத்தி வந்தார். 1971 இல் கொழும்புக் கோட்டையிலுள்ள முதலிகே மாவத்தையில் மூத்தமகன் குகனேசனை உதவியாகச் சேர்த்துப் புதிய நிறுவனம் ஒன்றை அமைத்துத் திறம்பட நடாத்தித் தேவையான செல்வங்களை ஈட்டிக்கொண்டார்.

இவற்றைத் தமக்கென மட்டும் கருதாமல் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கான சமூகப் பணியாகவும், இறை பணியாகவும் கருதி தன்னை ஒரு சமூக சேவகனாக ஆக்கிக்கொண்டார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 467-469