ஆளுமை:கணபதிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages சங்கரப்பிள்ளை
Birth 1929.08.31
Place சண்டிலிப்பாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை (1929.08.31 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் நடிகைமணி வி. வி. வைரமுத்து அவர்களிடம் நாடகத் துறையைப் பயின்று 1949 ஆம் ஆண்டிலிருந்து காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பயிற்சியற்ற தொழிலாளியாகக் கடமையாற்றி வந்தார்.

தொழிற்சாலையை மையமாகக் கொண்டு மறைமுகமாக இயற்றப்பட்ட இயமலோகத்தில் ஸ்ராக் என்னும் நாடகம் இவரால் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. மேலும் தங்கையின் பாசம், மூடநம்பிக்கை, கமக்கார மாப்பிள்ளை முதலிய நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி நடித்துள்ளார்.

இவர் தனது திறமைக்காக கலாவிநோதன், நாடக இயக்குனர், மக்கள் கலையரசு ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 138-139