ஆளுமை:ஐயம்பிள்ளை, அப்புக்குட்டி

From நூலகம்
Name ஐயம்பிள்ளை
Pages அப்புக்குட்டி
Pages -
Birth 1953.11.10
Place கிளிநொச்சி
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை, அப்புக்குட்டி (1953.11.10 -) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, பெரியகுளம் பிரிவினை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவரது தந்தை அப்புக்குட்டி. இவர் ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு இராமநாதர் வித்தியாசாலையில் பயின்றார். இவர் சந்தக்கவி படைப்பதில் தேர்ச்சி பெற்றவராகவும், கோவலன் கதை படிப்பதில் பரீட்சயம் பெற்றவராகவும் விளங்குகிறார்.

இவர் இதுவரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அமரர் கல்வெட்டுக்களுக்காக "திதி வெண்பா" பாடியும் அவற்றை தொகுத்தும் உள்ளார். இவர் "பசுந்தரையான்" எனும் புனை பெயரில் உள்ளூர் பத்திரிகைகளிலும் மலர்களிலும் கவிதைகள் மற்றும் பாடல்களை அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் பூநகரி பிரதேச சபையின் உபதலைவராக விளங்கியமையும் பெரியகுளம் காட்டுக் கண்ணகி அம்மன் பரிபாலன சபை தலைவராக தற்போது விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் 1996 இல் கொழும்பு "இந்துப்பிட்டி முருகன்" ஆலயத்தில் திருச்செந்தூர் புராணத்தை படித்தமைக்காக பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார். அத்துடன் 2013 ஆம் ஆண்டில் வாதவூர் வாதிரி எனும் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவராகவும் விளங்குகின்றார்.


Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 24-25