ஆளுமை:உமாபதிசிவம், வல்லிபுரம்

From நூலகம்
Name உமாபதிசிவம்
Pages வல்லிபுரம்
Birth 1932.02.22
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமாபதிசிவம், வல்லிபுரம் (1932.02.22 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் 1942 ஆம் ஆண்டிலிருந்து கவிஞராக, ஓவியராக, நாடக ஆசிரியராக, தயாரிப்பாளராக இருந்ததுடன் மிருதங்கம், கெஞ்சிரா போன்றவற்றின் வாத்தியக் கலைஞராகவும் திகழ்ந்தார். மேலும் தொலைக்கல்வி, திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் திகழ்ந்தார்.

இவர் சிறுவயதில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய நாடகப் போட்டியிலும் மதுரை வளவன் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியிலும் கலந்து பரிசு பெற்றார். இவர் தாம் சார்ந்த கலையை மதுரைத் தமிழ் சங்கம், மதுரை வளவன் மன்றம், தியாகராஜா பல்கலைக்கழகம், பாடசாலைகள், ஆலயங்கள், சிவச்செல்வி கலாமன்றம், காந்திஜீ சனசமூக நிலையம், தனியார் வானொலி, தனியார் தொலைக்காட்சி, மகாநாட்டு மண்டபங்கள் போன்ற இடங்களில் ஆற்றுகைப்படுத்திக் காட்சிப்படுத்தினார். இவர் இந்தியாவில் படிக்கும் போது தஞ்சை இராமகிருஷ்ணரிடம் பொய்க்கால் குதிரையாட்டத்தைப் பயின்றார். கிராமியக் கலையை பாடசாலை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து பல அரங்குகளில் காட்சிப்படுத்தினார்.

இவரது கலைப்புலமையைப் பாராட்டி கலைமாமணி, நிருத்தியவேந்தர் போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டதோடு, பொன்னாடைகள் போர்த்தியும், தங்கப்பதக்கங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 04