ஆளுமை:இரத்தினராசா, கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name இரத்தினராசா
Pages கணபதிப்பிள்ளை
Pages புவனேஸ்வரி
Birth 1972.04.01
Place வட்டவன்,வெருகல், திருகோணமலை
Category வேடக்கப்புறாளை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதிப்பிள்ளை இரத்தினராசா (1972.04.01) இவர் வாழைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வட்டவன் - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த பன்முக ஆளுமை கொண்ட வேடக்கப்புறாளை ஆவார். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் புவனேஸ்வரி. இவரது மனைவியின் பெயர் சந்திரகலா. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை வெருகல் வாழிஅத்தோட்டம் தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் வேடக்கப்புறாளையாகவும், வேடர் சமூகத்தினரிடையே தனித்துவமாகக் காணப்படுகின்ற உத்தியாக்கள் (முன்னோர்) வழிபாட்டின் நடைமுறைகள் நன்கறிந்த ஒருவராகவும் அதே சமயம் தமிழர் கிராமிய வழிபாடுகளை திறம்படச் செய்யக்கூடிய ஒருவராகவும் காணப்படுகின்றார்.