ஆளுமை:ஆறுமுகம், சேவுகன்

From நூலகம்
Name ஆறுமுகம்
Pages சேவுகன்
Pages -
Birth 1969.04.24
Place கிளிநொச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், சேவுகன் (1969.04.24-) கிளிநொச்சி, தருமபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சேவுகன். இவர் தனது ஆரம்பகல்வியையும், உயர்கல்வியையும் கிளி/தருமபுரம் மகா வித்தியாலயத்தில் கற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றினார்.

1990-1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'நிலாமுற்றம்', 'முழு நிலாக்கால ஒன்றுகூடல்கள்' எனும் பெயரில் இலக்கிய சந்திப்புக்களை ஒருங்கிணைத்து செயற்பட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் கண்டாவளை பிரதேச கலாசர செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும், கலாசார பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகவும், பிரதேச செயலக ரீதியாக இடம்பெறும் போட்டிகளுக்கு விடைத்தாள்களை மதிப்பிடும் குழுவில் ஒருவராகவும் செயற்பட்டு வருகிறார்.


Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 40-41