ஆளுமை:அல்-அஸுமத், பொன்னையா

From நூலகம்
Name அல்-அஸுமத்
Pages பொன்னையா
Pages மரியாயி
Birth 1942.11.22
Place மாத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 - 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார்.

இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப் புலவர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுங்காவியங்கள் எழுதியுள்ளார். புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்), மலைக்குயில் (கவிதைகள்), அல் அஸுமத் கவிதைகள் (கவிதைகள் 1987), வெள்ளை மரம் (சிறுகதைகள் 2001), குரல் வழிக் கவிதைகள் (கவிதைகள் 2009), பிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு (மொழிப்பெயர்ப்பு 2010), அறுவடைக் கனவுகள் (நாவல் 2010), ஆயன்னையம்மாதாய் (சிறுகதைகள் 2012) ஆகியவை இவரது நூல்கள்.

யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது, தேசிய அரச சாஹித்திய விருது, சிரித்திரன் சுந்தர் நினைவு விருது, முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது, தமிழியல் விருது ஆகிய விருதுகளையும் இலக்கியச் சாகரம், கவித் தாரகை ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 67-69
  • நூலக எண்: 12591 பக்கங்கள் 03-04