ஆளுமை:அரியநாயகம், கோவிந்தபிள்ளை

From நூலகம்
Name அரியநாயகம்
Pages கோவிந்தபிள்ளை
Pages சின்னம்மா
Birth 1950.12.13
Place செம்பியன்பற்று தெற்கு
Category புராணிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தபிள்ளை-அரியநாயகம் செம்பியன்பற்று தெற்குப் பகுதியில் பிறந்தார்(1950). ஆரம்பக் கல்வியை செம்பியன்பற்று தெற்குப் பாடசாலையில் தரம் எட்டு வரையிலும் பின்னர் தின்னவேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். நாகலிங்கம் பழனியார் அவர்களிடம் கற்று புராணங்களைப் படித்து கந்தபுராணம், திருவாதவூரார் புராணம்,பிள்ளையார்புராணம், சிவராத்திரி புராணம் ஆகியவற்றிற்கு பயன் சொல்வதில் சிறந்து விளங்குகிறார். 1976 ஆம் ஆண்டில் விசுவமடுப்பகுதியில் குடியேறினார். ஆரம்பத்தில் செம்பியன்பற்றில் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராகவும், பின்னர் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் கிராமசேவகராக முதல் நியமனம் பெற்று பரமன்கிராய், நல்லூர், முழங்காவில் ,ஆலங்கேணி,கௌதாரிமுனை,மட்டுவில்நாடு கிழக்கு, செட்டியகுறிச்சி, பல்லவராயன்கட்டு, கரியாலைநாகபடுவான், தர்மபுரம் ஆகிய இடங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்றார். வீரசிவாஜி, கணவனே கண் கண்ட தெய்வம், ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். ஜெயபுரம் முருகன் ஆலயத்தலைவராக உள்ளார். கலைநகரி, கலைக்கிளி விருதுகளைப் பெற்றுள்ளார்.