ஆளுமை:அப்துல் றசூல், அப்துல் மனாப்

From நூலகம்
Name அப்துல் மனாப் அப்துல் றசூல்
Pages அப்துல் மனாப்
Pages சித்தி உம்மா
Birth 1965.04.01
Place கிண்ணியா
Category இலக்கிய ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிண்ணியா றஹ்மானியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் மனாப் அப்துல் றசூல் 01.04.1965 இல் அப்துல் மனாப் மற்றும் சித்தி உம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

தற்பொழுது ஆசிரியராகப் பணிபுரியும் இவர், கிண்ணியா ஆயிலியடி கிராமத்தில் வசித்து வருகின்றார். 1987 இல் தினகரனில் வெளியான "சின்னஞ் சிறுசுகள்" என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். சிறுகதை, கவிதை, சிறுவர் பாடல், குறுந் திரைப்படம் எனப் பல்துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். வாவன்காடு வசந்தன், கட்டையாறு கவிராயர் என்பன இவரது புனைபெயர்.

1987 இல் வெளிவந்த குறுநகை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் இவர் ஆவார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல பல்வேறு சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

"இருபயணங்கள்" என்னும் குறுந்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வேடம் ஏற்றுள்ளார். உறவுகள் குதூகலிக்கட்டும் என்பது இவரது சிறுவர் பாடல் நூல். இது 2012 இல் வெளிவந்தது.

கிண்ணியா சமூகநல கலைக்கலா மன்றம் இவருக்கு "கலைத்தென்றல்" பட்டம் வழங்கிக் கௌரவித்தது. அதேபோல கிண்ணியா பிரதேச கலாசார அதிகாரசபை "பா வேந்தன் பட்டம்" வழங்கிக் கௌரவித்தது.

இன்றுவரை தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கிய பணிகளை தொடர்ந்து வருகின்றார்.