அன்னை இட்ட தீ

From நூலகம்
அன்னை இட்ட தீ
547.JPG
Noolaham No. 547
Author குழந்தை சண்முகலிங்கம், ம.
Category தமிழ் நாடகங்கள்
Language தமிழ்
Publisher தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ்
Edition 1997
Pages 183

To Read

நூல்விபரம்

போரின் பல்வேறு வகையான நெருக்கீடு நினைவுகளையும், அதனால் ஏற்படும் தாக்கங்களையும் பிரதிபலிக்கும் அதே வேளையில் இவற்றினால் குடும்ப, தனிமனித மட்டத்தில் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களை மிகச் சிறந்த முறையில் இந்நாடகம் வெளிப்படுத்தியுள்ளது. ஈழத்து நாடக உலகில் நன்கறியப்பட்டவரான குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அன்னை இட்டதீ நாடகத்தினதும் அது தொடர்பான நடிகர்களின் அனுபவப் பகிர்வுகளினதும், கட்டுரைகளினதும் தொகுப்பு இது. “ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் ந.சண்முகலிங்கம்-அரங்கியல் வரலாற்று விமர்சனப் பதிகை” என்னும் கா.சிவத்தம்பியின் சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.


பதிப்பு விபரம் அன்னை இட்ட தீ. குழந்தை ம.சண்முகலிங்கம். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (சென்னை: கார்த்திக் ஓப்செட் பிரின்ட்ஸ்). 183 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 21 * 13.5 சமீ.


-நூல் தேட்டம் (# 4521)