மீடியாவிக்கி பேச்சு:Sidebar
பிரபலமான பக்கங்கள்
அதிகமாகப் பார்க்கப்படும் பக்கங்களை வாசகரின் தேவைக்குக் கொடுப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருக்கலாமெனினும் நூலகத்துக்கு இழப்பாகும்.
இயல்பாகவே அதிகம் பார்க்கப்படும் பக்கங்கள் அதிகம் பார்க்கப்பட்டு முதலில் தெரியும் மின்னூல்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் ஏனைய பக்கங்களை விட அப்பக்கங்கள் பார்க்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால் புதிதாக இணைக்கப்படும் அதிகம் பார்க்கப்படும் பக்கமொன்று அதிகம் பார்க்கப்பட பல காலமாகலாம்.
அதாவது அதிகம் பார்க்கப்படும் பக்கங்களுக்கான இணைப்பானது குறித்த சில பக்கங்கள் அதிகம் பார்க்கப்படுவதற்கு ஊக்கியாக அமையும். இதில் நூலகத்துக்கு இழப்பு என்னவென்றால் பகுப்பாக்கங்களூடாகவும் தேடுபொறிகளூடாகவும் இயல்பாக வாசகர் எவற்றைத் தேடுகிறார்கள் என்பதை அறிய முடியாது போகும்.
இப்போதுள்ள நிலையில் இலக்கணம், இலங்கை வரலாறு ஆகிய விடயங்கள் அதிகம் பார்க்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயப்பரப்புக்களில் முழுமையான ஆவணப்படுத்தலின் தேவையை உணர முடிகிறது. ஏற்கனவே பெண்ணியம், இலங்கை இனப்பிரச்சினை ஆகியன தொடர்பில் பரவலான ஆவணப்படுத்தல் நூலகத்தில் நிகழ்ந்துள்ளது. அடுத்து இலங்கை வரலாறு, தமிழ் இலக்கணம் ஆகியனவற்றை ஆவணப்படுத்துவது வாசகருக்குப் பயனுள்ளது என்பதை உணர முடிகிறது. இதே விடயப்பரப்புக்களில் ஏனைய வலைத்தளங்களிலும் (எ-டு: விக்கிப்பீடியா) அச்சிலும் கூட உள்ளடக்கம் தேவைப்படுவதை உணர முடிகிறது.
இந்த வகையில் அதிகம் பார்க்கப்படும் பக்கங்களை sidebar இல் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். sidebar இல் முகப்பு, நூலகம் பற்றி, நிதியுதவுக, இணைப்புக்கள், Font Help, புதிய பக்கங்கள் ஆகியனவற்றை மட்டும் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். (இறுதியாக இணைக்கப்பட்டவை என்பதனைப் புதிய பக்கங்கள் எனப் பெயரிடலாம்) அத்துடன் அண்மைய மாற்றங்களுக்கான இணைப்பு புகுபதிகை செய்தோருக்கு மட்டும் தெரிவதாக அமைக்கப்பட வேண்டும். கோபி 11:47, 25 செப்டெம்பர் 2008 (UTC)
1. நூலகத்திற்கு இதனால் பெரியளவில் இழப்பிருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் நூலகம் இவ் ஆய்வுகளை முன்வைத்து ஆவணப்படுத்தலை செய்யவில்லை. இனிமேலும் செய்வதற்கான சூழ்நிலையும் இல்லை. மிக அதிகமாகச் செய்யப்படக் கூடியது இருக்கும் விடயங்கள் தொடர்பான முழுமைப்படுத்தல்களையே. அதை விட இவ்வகையான ஆய்வுகளுக்கான ஏதுநிலை நூலகத்தில் இல்லை. முறையான தரவுத்தளமே இல்லாத நூலகம் இவ்வகையான விடயங்களுக்காக கரிசனையுடன் இருப்பது வியப்பானது.
2. தற்போது கூட நூலகம் பங்களிப்பாளர்களது பார்வை தொடர்பான தரவுகளையே பெருமளவில் கொண்டுள்ளது. அது கூட சரியெனக் கூறமுடியாது. மேலும் 3 வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்ட பிரதியின் பார்வை பக்கத்தை வைத்து நாம் அதனைக் கூறிவிடவும் முடியாது. அதுமட்டுமல்ல முன்பக்கத்தில் இணைக்கப்படும் காட்சிப்படுத்தப்படும் நூல்கள் சிலவேளை அதிகமானாரோல் பார்க்கப்படலாம்.
3. அதிகம் பார்க்கப்படும் நூல்கள் இன்னும் அதிகம் பார்க்கப்படும் எனக் கருதினால், முதலாவது நூலும் இன்னும் அதிகமாகப் பார்க்கப்படும். அதைவிட முதலாவது எழுத்தாளரது நூல்கள் அதிகமாகப் பார்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆக, இவ்வழு பிரச்சனையாகக் கருதப்பட முடியாதது.
4. அண்மைய மாற்றங்களைப் பார்வையிடுவதற்காக அடிக்கடி புகுபதிகை செய்ய முடியாது. மேலும் பயனர் அங்கத்துவம் இல்லாதவர்கள் கூட அண்மைய மாற்றங்களை பார்க்கின்றனர். ஆகவே அதன் தேவை முகியமானது.
5. அதிகம் பார்க்கப்படுவதான பக்கங்களை இணைக்கும் போது மேற்கூறிய பிரச்சனைகள் இருந்தாலும் நான் மேற்சொன்ன காரணங்களால் அவை அவ்வளவாக பெரியளவான தாக்கத்தை ஏற்படுத்துவ அல்ல பயனரின் வசதியுடன் ஒப்பிடும் போது.. Shaseevan 13:39, 25 செப்டெம்பர் 2008 (UTC)
அண்மைய மாற்றங்கள் தொடர்பான கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதிகம் பார்க்கப்படும் பக்கங்களைக் காட்சிப்படுத்துவது தொடர்பில் திருப்தியில்லாமலேயே உணர்கிறேன்.
இப்போதுள்ள அதிகம் பார்க்கப்படும் பக்கங்களில் கூட நீங்கள் குறிப்பிடும் வழுக்கள் உள்ளன. குறிப்பாக நூலகம்:01 பட்டியலில் உள்ள நூல்களும் அ வரிசை நூல்களும் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றையும் தாண்டி வரலாறு தொடர்பான நூல்கள் பார்க்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. நூலக விக்கிப் பக்கங்கள் கடந்த 9 மாதங்களில் ஐந்தரை இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன. இது பங்களிப்பாளரால் மட்டும் ஏற்பட்டதல்ல.
ஆனால் sidebar இல் இணைக்கப்படும் இணைப்பு நூலகத்துக்கு எல்லாவிதத்தில் வருவோரையும் ஈர்க்கும். அதனால் ஏற்படக் கூடிய வழு பெரியதாக இருக்கும். முழுமையாக தேடலினூடாகச் செயற்படும் குட்டன்பேர்க் போன்றவை கூட sidebar இல் இதனை இணைப்பதில்லை.
நூலகத் திட்டத்துக்கு அப்பாலும் இது பயனுள்ளது. நூலக விக்கிப் பக்கங்கள் பார்க்கப்படும் எண்ணிக்கையைக் காட்டுவதாகத் தளத்தை அமைக்கக்கூடாதென்ற மயூரனின் கோரிக்கையை நான் மறுத்தமைக்கு இதுவே காரணம்.
ஆனால் மின்னூல்களை வரிசைப்படுத்துவது நூலகத்தின் போக்குக்குத் தடையாக இருக்கும். மின்னூல்களை rank பண்ணுவதனை (அது பயனர் பார்வையை அடிப்படையாகக் கொண்டதென்றாலும்) எழுத்தாளரின் நிலையில் நின்று பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இணைப்புக்கள் - வெளியிணைப்புக்கள் என இரண்டு வருவதைத் தவிர்க்கவும் இறுதியாக இணைக்கப்பட்டவற்றை முதற்பக்கத்தில் இணைப்புத் தரவும் அதிகம் பார்க்கப்பட்டவற்றை எங்கும் இணைக்காதிருக்கவும் பரிந்துரைக்கிறேன். நன்றி கோபி 14:10, 25 செப்டெம்பர் 2008 (UTC)