நிறுவனம்ːகிளி/ வட்டக்கச்சி குஞ்சுமிசான் ஆலயம்
பெயர் | வட்டக்கச்சி குஞ்சுமிசான் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | வட்டக்கச்சி |
முகவரி | வட்டக்கச்சி சந்தையடி, கிளிநொச்சி |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
1950 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் வட்டக்கச்சி வயல் சமுகம் இணைந்து உருவாக்கிய ஆலயம் இதுவாகும். இதன் தர்மக்தா பரமன் சுமணன் ஆவார். இங்கு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக இடம்பெறும். அத்துடன் ஆலயம் கட்டடமாக அமைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் காசிப்பிள்ளை, விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆவார். கோபுரம் இல்லாத மூலஸ்தானமாக கட்டப்பட்டு 1வது கும்பாபிஷேகம் 2004 ஆம் ஆண்டு இடம்பெற இறைவன் அருள் கைகூடவில்லை, காரணம் உள்நாட்டு யுத்தம் மக்களை இடப்பெயர்வுக்கு உள்ளாக்கியது. காலம் உருண்டோடி 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் இடம் பெற்றதன் பின் ஆலய அறங்காவலர்கள் ஆலயத்தில் மூலஸ்தானம் கோபுரமாக்க முடிவெடுத்தார்கள். இனக் கலவரத்தின் போது இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு மாயவனூரில் காணிகள் வழங்கப்பட்டது. சித்தர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை முருகன் அவர்கள் தனது சிந்தனையில் உதித்த எண்ணத்தினாலும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அவ்விடத்தில் ஆல்யம் அமைக்க எண்ணி அமைத்ததாக கூறப்படுகின்றது.