நிறுவனம்:ஸ்ரீ நாகதேவி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீ நாகதேவி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கனகபுரம்
முகவரி இல-40, 6ஆம் பண்ணை, கனகபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் தற்போது குறிக்கப்பட்டுள்ள இரண்டாவது யாழ்ப்பாணம் எனத் திகழும் ஆனையிறவு தாண்டிய ஈழத்தின் கிளிநொச்சி கனகபுரம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டமும் ஒன்றாகும் யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட வினாசித்தமிபி சச்சிதானந்தம் அவர்கள் சிறு பராயத்திலேயே இறைவன் மீது அளப்பரும் பக்தி கொண்டவர். இவர் கனகபுரம் 6 ஆம் பண்ணை C யில் 40 ஆம் இலக்கக் காணியில்1965 அம் ஆண்டு குடியேற்றப்பட்டார். பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்ட ஈழத்து சைவ வழிபாட்டு நம்பிக்கை பரம்பரையில் தோன்றிய இவர் குடியேற்றப்பட்ட கனகபுரத்திலும் அதனைத் தொடராமல் இருக்கவில்லை. தனது வீட்டு வளவினுள் தலவிருட்சமான வேப்பமரத்தடியில் வெள்ளைநிற நாகங்கள் வாழும் புற்றும் துளசிச்செடியும் இருப்பதைக் கண்டார். அத்துடன் நள்ளிரவு வேளையில் ஒரு பெண் தெய்வம் உலாவுவதனையும் ஞானக் கண்களில் கண்டு கொண்டார். அதன் காரணமாக 1979 ஆம் ஆண்டு அவ்விடத்தில் ஒரு கோயில் அமைத்து நாட்டார் தெய்வ வழிபாடு முறையில் பூஜைகளைச் செய்து வந்தார். பின்னர் சாமி ஆடுதல்,வாக்குச் சொல்லுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது. பொங்கல்,மடைபரவுதல், விழா எடுத்தல்,உருவாடுதல் எனச் சிறப்பாக ஆலயம் எழுச்சி பெற்று வந்தது. 27.06.1992 ஆம் ஆண்டு தொடக்கம் நாகபூஷணி, நாகதேவி, நாககன்னி என்ற நாமங்களுடன் ஆலய ஆராதனைவழிபாடுகள் இடம்பெற்றன. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழலினால் சில காலம் வழிபாடுகள் இடம்பெறாது விடப்பட்ட போதும் 2010 ஆம் ஆண்டு மீளக்குடியேறிய பின்னர் வயதாகிய காலத்திலும் சச்சிதானந்தம் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அம்மன் புகழ் பரப்பி, தனது பிள்ளைகளிடம் பணம் பெற்று வந்து புதுப்பொலிவுடன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதுடன் அந்தணர் ஒருவரை நியமித்து வழிபாடு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாலயத்தில் தினமும் ஒருகால நித்திய பூசையும், கேதாரகௌரி விரதம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், ஆடிப்பூரம், போன்ற விஷேட நிகழ்வுகளும், அம்மன் பிரதிஸ்டை செய்யப்பட்ட படச நிகழ்வுகளும் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது. கனகபுர வாழ் பக்தர்களும், அயற்கிராம அடியார்களும், நாளும் அம்மனைத் தரிசித்து நேர்த்தி வைத்து நாகபூசணித் தாயின் அருட்கடாட்சம் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள்.