நிறுவனம்:யாழ்/ மாவை கொல்லங்கலட்டி சிதம்பரேஸ்வரம் கோயில்

From நூலகம்
Name யாழ்/ மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி சிதம்பரேஸ்வரம் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மாவிட்டபுரம்
Address கொல்லங்கலட்டி, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மாவை கொல்லங்கலட்டி சிதம்பரேஸ்வரம் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ளது. இராவணேஸ்வரன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இலங்காபுரியில் பிரதிஷ்டை செய்த 9 கோடி சிவலிங்கங்களுள் கொல்லங்கலட்டி சிதம்பரேஸ்வரமும் ஒன்றென கருதப்படுகின்றது.

இச் சிவலிங்கமானது என்ன நிறமென்று யாராலும் வர்ணிக்க முடியாத அழகு நிறைந்ததாக காணப்படுகிறது. இங்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஸ்ரீமத் சிதம்பரேஸ்வரப் பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இச் சிவலிங்கமானது போர்த்துக்கேயரால் அழிக்கப்படுமுன் சந்தனக்கல் ஆசனத்தில் வைத்து சலவைக்கல் தொட்டியால் மூடி மண்ணில் புதைக்கப்பட்டு 1860ம் ஆண்டு வீரகத்திப் பிள்ளையார் மகாமண்டபத்தின் சுவருக்கு அத்திவாரம் வெட்டும் போது கண்டெடுக்கப்பட்டு பூசித்து வரப்படும் இச் சிவலிங்கமானது வீரகத்திப் பிள்ளையார் கோயிலுக்கு வடபால் கோயில் கொண்டு அமைந்துள்ளது. இங்கு 1873, 1926, 1941, 1976, 1988, 2003 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Resources

{{வளம்|5274|150-155}