நிறுவனம்:யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மயிலிட்டி
Address மயிலிட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மேன்மை தங்கிய பொஞ்சீன் ஆண்டகையின் உழைப்பினலும், கோவைக் குருக்களின் உதவியினாலும் சேர்த்து 1873ஆம் ஆண்டு மாசி மாதம் யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி பெரிய நட்டுத்தேவன்துறை எனும் இடத்தில் காணிக்கை மாதா தேவாலயத்துக்கு அருகாமையிலுள்ள வீதியோரமாக அமைந்துள்ள வளவில் யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 50 ஆண்களும் 02 பெண்களும் கல்வி கற்றனர்.

1931ஆம் ஆண்டு யாழ். மேற்றிராசனத்திலிருந்த வந்தனைக்குரிய கியோமர் ஆண்டகை இந்த கிராமத்து மக்களின் கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் மேன்மையடையச் செய்யவேண்டித் திருக்குடும்ப கன்னியரை கல்வி பயிற்ற அனுப்பி வைத்தார். 1873ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1963.04.01இல் அரசினால் சுவீகரிக்கப்பட்டது. இதன் பின்னர் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப்படசாலை வரணி, பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களில் இயங்கி தற்போது ஆனைக்கோட்டையில் தனியார் காணி ஒன்றில் க.பொ.த சாதாரண தரம் வரை இயங்கிவருகின்றது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 38-39

வெளி இணைப்புக்கள்