நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address 4ஆம் வட்டாரம், புங்குடுதீவு மேற்கு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website


புங்குடுதீவு பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் புங்குடுதீவில் 19ம்நூற்றாண்டின் முற்பகுதியிலே அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.இக் காலப்பகுதியில் இங்கு கம்மாலை (இரும்பு வேலை) வைத்திருந்த சின்னப்பழனி,பெரியபழனி சகோதரர்கள் அங்கு நின்ற மாவிலங்கை மரத்தடியில் தங்களின் குலதெய்வமாகிய காளியின் வழிபாட்டுக்காக இரும்பாலான சூலத்தை வைத்து வழிபட்டுள்ளனர் என்று இவ்விடத்தைச் சேர்ந்தவரும் சமய ஆர்வலருமான சண்முகம் அவர்களின் கூற்றுப்படி அறிய முடிகின்றது. மேற்கூறப்பட்டுள்ள மாவிலங்கை மரமானது தற்பொழுதும் கோவிலின் உள் வீதியிலே தெற்கு புற வாசலில் நிற்பதை காணமுடிகின்றது.


வயதான பெரியவர்களிடம் இம் மரத்தின் வயது என்னவென்று கேட்டால் தாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்திலிருந்தே இம் மரம் இப்படியேதான் இருந்தது என்பார்கள். அப்படி ஓர் சிறப்புடன் கூடிய இம் மரத்தின் விசேட அம்சம் என்னவென்றால் இது பருப்பதுவுமில்லை, கிளைகள் படுவதுமில்லை. தொடக்கத்திலே மரத்தின் கீழே இரும்புச்சூலம், சங்கு, சேமக்கலத்துடன் இக் கோவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பின்னர் 1939, 1940ம் ஆண்டு காலப்பகுதியிலே மூலஸ்தானமும், ஏனைய மண்டபங்களும் கட்டப்பட்டு இரும்பாலான சூலம் செப்புச்சூலமாக செய்யப்பட்டு மகாகும்பாபிசேகம் செய்யப்பட்டது.


Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 99-100


வெளி இணைப்புக்கள்

பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்